புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2018 (13:42 IST)

மம்மிகளுக்குள் கள்ளக்காதல்: அதிர்ச்சி தந்த ஆய்வின் முடிவு!!

எகிப்தில் உயர்குடியில் பிறந்த மக்கள் இறந்தபின்னர் அவர்களது உடல் பதப்படுத்தப்படும். இவை அனைத்தும் பிரமிட்டுகளில் புதைக்கப்படும். இவை மம்மிகள் என அழைக்கப்படுகின்றன.
 
மம்மிகள் குறித்த ஆய்வுகள் இன்று வரை நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் எகிப்த் தலைநகர் கெய்ராவில் உள்ள டேர் ரிபே கிராமத்தில் கடந்த 1907 ஆம் ஆண்டு இரு மம்மிகள் அருகருகே கண்டுபிடிக்கப்பட்டன. 
 
இந்த இரண்டு மம்மிகளின் உடல் உள்ளூர் ஆளுநர் மகன்கள் நம்-நக்த் மற்றும் நக்த்-ஆங் என தெரியவந்தது. சுமார் 3,800 ஆண்டுகளாக இந்த மம்மிகள் ஆய்வில் ஈடுபத்தப்பட்டுள்ளன. இந்த இரு உடல்கள் மத்தியில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இரு உடல்களிலும் எம்1ஏ1 எனப்படும் மைட்டோகான்டிரில் ஹேப்லோடைப் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. 
 
இதன் மூலம் இருவரும் ஒரே தாயின் மூலம் பிறந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், தந்தை மூலம் வரும் குரோமோசோம் மரபணு தொடரில் மாற்றம் இருத்துள்ளது. இதன் மூலம் இவர்கள் வேறு வேறு தந்தைகளுக்கு பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.