செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:52 IST)

அருவி பட இயக்குனரோ குடும்பத்தினருக்கோ கள்ளக்காதல் இருக்கலாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் டிவிட்

சமீபத்தில் வெளியான தமிழ் படமான ‘அருவி’ விமர்சகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றுள்ளது.


 
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய அருவி படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில்  வெளிவந்த அருவி படம், லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சியின்  மறுப்பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இப்படத்தில் அதிதி பாலன் நாயகியாக நடித்திருந்த இந்தப் படத்தில் கவிதா பாரதி, லட்சுமி கோபால்சாமி, அஞ்சலி வரதன்  உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
 
இப்படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிண்டலடித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
அந்நிலையில், இந்தப் படம் பற்றி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், எனது நிகழ்ச்சியையும், என்னையும் கிண்டல் செய்தாலும்  அருவி நல்ல படம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் அருவி படம் "பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்த  படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிராக எதுவும் செய்ய வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார்” என பாராட்டியிருந்தார்.
 
அதேநேரம், பெண்ணியப் படமாக எடுத்திருந்தாலும், அடக்குமுறைக்கு, அநீதிக்கு ஆளான பெண்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கிண்டல் செய்துள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில், இப்படம் ஒரு நபர் கருத்து தெரிவித்திருந்த போது ‘சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றுள்ளீர்களா?  கள்ளக்காதலா? அருவி படத்தின் இயக்குனர் அல்லது குடும்பதினராக இருக்கலாம். அதனால்தான் அதுபற்றி அப்பட இயக்குனருக்கு அதிகமாக தெரிந்திருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.