1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (12:25 IST)

கள்ளக்காதல் விபரீதம்: மனைவியுடன் சேர்த்து 3 பேரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்!!

ஜம்முவில் மனைவியின் கள்ளக்காதல் விபரீதத்தால் மனைவியுடன் சேர்த்து மூன்று பேரை சுட்டுக்கொன்றுள்ளார் மத்திய பாதுகாப்பு படை வீரர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்த சுரேந்தர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்)  வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருடன் ராஜேஷ் என்ற வீரரும் பணியாற்றி வருகிறார். ராஜேஷிற்கு சோபா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இரு வீரர்களும் சாலிமார் சவுக் பகுதியில் உள்ள வீரர்கள் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
 
இந்நிலையில் சுரேந்தரின் மனைவிக்கும் ராஜேஷிற்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுரேந்தர் மனைவியை கண்டித்துள்ளார். இதைக் கேட்காமல் அவரது மனைவி தொடர்ந்து கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த சுரேந்தர் தனது மனைவியை சுட்டுக் கொன்றார். பிறகு ராஜேஷையும் அவரது மனைவி சோபாவையும் சுட்டுக் கொன்றார்.

இதையடுத்து சுரேந்தரை உள்ளூர் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தால் இரு வீரர்களின் 4 குழந்தைகளும் அனாதையாகி உள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.