சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த மகளுக்கு தாய் செய்த காரியம்: அதிர்ச்சி சம்பவம்
இன்ப அதிர்ச்சி கொடுக்க வந்த மகளுக்கு எதிர்பாராத விதமாக தாய் செய்த அதிர்ச்சி காரியம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கல்லூரியில் தங்கி படித்து வரும் 18 வயது மாணவி ஒருவர், எதிர்பாராத விதமாக வீட்டுக்கு வந்து, தாயாருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவேண்டும் என நினைத்துள்ளார். அதன் படி இரவு நேரத்தில் தாயார் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருக்கும்போது, மாணவி வீட்டிற்குள் மெல்ல நுழைந்துள்ளார்.
”வீட்டின் ஹாலில் ஏதோ சத்தம் கேட்கிறதே, ஒரு வேளை மர்ம நபர் யாரோ உள்ளே நுழைந்துவிட்டாரோ?” என நினைத்த தாயார், தனது லைசன்ஸ் பெற்ற பாய்ண்ட் 38 துப்பாக்கியை கையில் எடுத்து தயாராக வைத்திருந்தார். பின்னர் மாணவி தாயாரின் படுக்கை அறையின் கதவை திறந்து வந்துள்ளார்.
உடனே தனது கையில் உள்ள துப்பாக்கியால் மாணவியை சுட்டுள்ளார். சுட்டதற்கு பிறகு தான் தெரிந்துள்ளது அது தனது மகள் என்று. தாயார் சுட்டதில் மாணவியின் கையில் பலத்த காயம்பட்டு ரத்தம் வழிந்தோடியது. பின்னர் உடனடியாக 911 எமெர்ஜென்சிக்கு தொடர்பு கொண்டு போலீஸார் வரவழக்கப்பட்டனர். பின்பு அந்த மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மாணவி நலமாக உள்ளார் என கூறப்படுகிறது.