ஷூ கலர் பயங்கரம்!! ஃபாரினில் கலக்கும் எடப்பாடியார்!

Last Updated: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (13:44 IST)
அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி உலக புகழ்பெற்ற பஃபல்லோ கால்நடை பண்ணையை பார்வையிட்ட வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
கடந்த 28 ஆம் தேதி வெளிநாடு சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இங்கிலாந்த் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில் உள்ளார். அங்கு பஃபல்லோ கால்நடை பண்ணையை பார்வையிட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்கா நாட்டின் பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று அங்கு செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து தெரிந்துக்கொண்டதாக பதிவிடப்பட்டுள்ளது. 
இதோடு சில வீடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் எடப்பாடி பழனிச்சாமியின் ஷூ பலரை கவர்ந்துள்ளது போலும். ஆம், கமெண்டுக்களில் இணையவாசிகள் ஷூ கலரை குறிப்பிட்டு பாராட்டி இருக்கின்றனர்.
 
இங்கிலாந்து சென்ற போது கோட் போட்டி டிரெண்டான எடப்பாடியார் இப்போது அமெரிக்கா பயணத்தில் ஷூ கலரால் டிரெண்டாகியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :