புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (08:14 IST)

36 லட்சத்தை தாண்டியது உலக அளவிலான கொரோனா பாதிப்பு: திணறும் அமெரிக்கா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,42,508 ஆக உயர்ந்துள்ளதால் உலக நாடுகள் கொரோனாவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. அதேபோல் உலக அளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,94,246ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,52,214ஆகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் 12,12,835 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஸ்பெயினில் 248,301 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 211,938 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 190,584 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸ் நாட்டில் 169,462 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 166,152 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 145,268 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்தியாவில் 46,437 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,566 பேர்கள் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்பட உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது