புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 30 அக்டோபர் 2019 (10:28 IST)

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; அயல்நாடுகளுக்கு மோடி அழைப்பு

ரியாத்தில் நடைபெற்ற முதலீடு குறித்தான நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ரியாத்தில் நடைபெற்ற முதலீடு குறித்தான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ”வருகிற 2024 ஆம் இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பு, புதிய பைப் லைன்கள், எரிவாயு இறக்குமதி முனையங்கள் போன்றவற்றில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்தியாவிற்கு அதிகளவு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது” என கூறினார்.

மேலும் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும், வெளிநாட்டினர் முதலீடு செய்ய இந்தியா ஒரு சிறந்த நாடாக இருப்பதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.