வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (13:16 IST)

மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கம்.! ஐடி ஊழியர்கள் தவிப்பு..!

Software
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட்  மென்பொருள் முடங்கியதால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவித்தனர்.
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் ஏராளமான இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். 
 
தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவித்தனர். சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 

CROWD STRIKE அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கின. மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் ஆகியவற்றிலும் சேவைகள் முடங்கின.