ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (12:53 IST)

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவராகும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்: குவியும் வாழ்த்துக்கள்

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் பவன் தவுலூரி என்பவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  சர்பேஸ் பிரிவுக்கு பவன் தவுலூரி தலைமை வகித்து வந்த நிலையில் தற்போது விண்டோஸ் பிரிவுக்கும் சேர்த்து  தலைமை வகிக்கவுள்ளார்.
 
பவன்  தவுலூரி சென்னை ஐஐடியில்  பட்டம் பெற்றவர் என்பது றிப்பிடத்தக்கது. உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பலர் பணிபுரிந்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது  பவன் தவுலூரியும் இணைந்துள்ளார்

 
Edited by Siva