1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:04 IST)

'நன்மடோல்' என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

cyclone
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 
 
 ஜப்பான் நாட்டில் நன்மடோல் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளதாகவும் இந்த புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
சமீபத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழை போல் ஜப்பானில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதுமட்டுமின்றி மிக மோசமான சூறாவளி தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
 இந்த நிலையில் நன்மடோல் என்ற சக்தி வாய்ந்த புயல் நல்ல மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தும் என்றும் இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.