திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (14:46 IST)

வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவரான வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் இன்று சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமான வடிவேலு, கவுண்டமணி செந்தில் என்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்து தமிழக மக்களை தினசரி சிரிக்க வைத்து சிரிப்பு ராஜாவாக முடி சூட்டிக்கொண்டார். அதன் பின் அவர் இல்லாத நாள் தமிழர்களுக்கு இல்லை. அவர் வசனங்களை பேசாத தமிழர்கள் இல்லை என்ற நிலை உருவானது.

அரசியல் காரணங்களால் சினிமாவில் முழுமையாக நடித்து 10 ஆண்டுகள் ஆனபோதும் சோசியல் மீடியாவே அவர் வசனங்களை சொல்லியும் மீம்ஸ்களைப் பகிர்ந்தும்தான் இயங்கி வருகிறது. இதையடுத்து இப்போது நாய்சேகர் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இன்று 62 ஆவது பிறந்தநாள் காணும் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.