செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (21:15 IST)

ஊருக்கு உபதேசம் .... வீட்டில் கொடுமைப்படுத்திய யூடியூபர் கைது!

ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, வீட்டில் குழந்தைகளை கொடுமைப்படுத்திய பெண்ணுக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நாட்டைச் சேர்ந்த உருபி பிராங்க் என்பவர் சமூக வலைதளமான யூடியூபில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று மற்ற பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்.
 
இந்த  நிலையில், ஊருக்கு தான் உபதேசம் தனக்கில்லை என்பது போல் அவர் தன் பிள்ளைகாளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
 
அதாவது, தன் குழந்தைகள் சாத்தானின் பிடியில் இருப்பதாக்க கூறி  வீட்டிற்குள் அடைத்து வைத்து, கொடும்படுத்தியுள்ளார். இந்த நிலையில், அவரின் 12 வயது மகன் ஜன்னல் வழியே தப்பிவந்து அருகில்  இருப்பவர்களிடம் கூறவே, ரூபி ப்ராங்க் பற்றிய உண்மை வெளியானது.
 
இந்த நிலையில், அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அவர் மீதான  குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் அவருக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.