செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜனவரி 2024 (13:35 IST)

அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு.! யூடியூபர் ஜோ மைக்கேலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

apsra reddy
அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னையை சேர்ந்த அப்சரா ரெட்டி அதிமுக செய்தி தொடர்பாளராகவும், பிரபல மாடலாகவும் இருக்கிறார். இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இந்த நிலையில் பிரபல மாடலிங் நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் அப்சரா ரெட்டி குறித்து அவதூறாக பேசிய 10-க்கும் மேற்பட்ட வீடியோக்களை யூடியூபில்  வெளியிட்டதாக கூறப்படுகிறது.
 
இதை அடுத்து ஜோ மைக்கேல் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்த அப்சரா ரெட்டி, தன் மீது வதந்திகளை பரப்பி வரும் ஜோ மைக்கேல் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று  குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்சராவுக்கு ஜோ மைக்கேல் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அப்சரா தொடர்பான வீடியோக்களை யூ டியூபில் இருந்து கூகுள் நீக்கியதால் அந்நிறுவனம் நஷ்ட ஈடு வழங்குவதில் இருந்து தப்பியது.