புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 ஜனவரி 2022 (08:28 IST)

கொரோனாவுடன் வாழ பழகி கொள்ளுங்கள்: மருத்துவ நிபுணர்கள் தகவல்

கொரோனா வைரஸ் உலகிலிருந்து முழுமையாக ஒழிய வாய்ப்பில்லை என்றும் எனவே கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அதன்பின் இந்தியா உள்பட கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பரவியது என்பதும் இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் இலட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொரோனா தொற்று மருத்துவ கட்டமைப்புகளை சிதைத்து வருவதாகவும் கொரோனாவுடன் வாழ நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனாவை முழுமையாக ஒழிக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்
 
எனவே கடுமையான ஊரடங்கு எதுவும் பிறப்பிக்காமல் பொதுமக்களை கொரோனாவுடன் வாழ பழக்கப்படுத்துங்கள் என அனைத்து நாட்டு அரசுகளுக்கும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்