1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2025 (11:06 IST)

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

Los angeles Fire

அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ள நிலையில் பலருக்கும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கலிபொர்னியா மாகாணம் காடுகள் அதிகம் சூழ்ந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு தற்போது திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது. விமானங்கள் கொண்டு தீயை அணைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஈட்டன், பாலிசேர்ஸ், ஹாலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 70 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 2,500 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.

 

பல குடியிருப்பு பகுதிகளில் காட்டுத்தீ சூழ்ந்த நிலையில் அந்த அதிர்ச்சி காட்சியை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K