டுவிட்டரின் புதிய சிஇஓ ஆக பொறுப்பேற்றார் லிண்டா யக்காரினோ.. முதல் ட்விட் என்ன தெரியுமா?
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆக கடந்த சில நாட்களுக்கு முன்னர் லிண்டா யக்காரினோ என்பவர் எலான் மஸ்க் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி ஏற்றுக்கொண்டார்.
ட்விட்டர் நிறுவனத்தில் சிஇஓவாக பதவியேற்ற பின்னர் லிண்டா யக்காரினோ தனது முதல் ட்வீட்டில், ட்விட்டரின் வளர்ச்சிக்காக எலான் மஸ்க் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டர் 2.0வை உருவாக்க தான் உறுதியுடன் இருப்பதாகவும் வணிக செயல்பாடுகளை அதிகப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.
ட்விட்டரில் சி.இ.ஓவாக பதவியேற்றுள்ள லிண்டா யக்காரினோ பத்து ஆண்டுகளுக்கு மேலாக என்பிசி யூனிவர்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்பதும் அந்நிறுவனத்தின் தொழில் துறை வழக்கறிஞராகவும், விளம்பர விற்பனை தலைவராகவும் இருந்த அனுபவம் தற்போது அவரை ட்விட்டரை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Siva