AI தொழில்நுட்பத்தால் ஒரே மாதத்தில் 4000 பேர் வேலை இழப்பு! இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!
உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் மற்ற தொழில்நுட்பத்தை விட இந்த தொழில்நுட்பம் மிக அதிகமாக வளர்ந்து வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது.
இரண்டே மாதங்களில் இந்த தொழில்நுட்பத்தை 100 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் உலகம் முழுவதும் சுமார் 30,000 பேர் வேலை இழந்த நிலையில் அதில் 4000 பேர் AI தொழில்நுட்பத்தால் மட்டுமே வேலை இழந்தனர் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
AI என்ற செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் இன்னும் அதிகமான வேலை வாய்ப்புகள் குறையக்கூடும் என்று வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
சாட்ஜிபிடி, பர்ட் உள்பட ஒரு சில AI தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் தளங்களில் ஆதிக்கம் செலுத்தி வருவது மனித வேலைவாய்ப்புகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது
Edited by Siva