அனைத்து நாடுகளையும் இலங்கு வைக்கும் ஏவுகணை! – பார்வையிட்ட கிம் ஜாங் அன்!
உலக நாடுகள் அனைத்தையும் இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை கிம் ஜாங் அன் பார்வையிட்ட புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே வடகொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஹைப்பர்சோனிக், அணு ஆயுத ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதித்து வருவதை கண்டித்து அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்துள்ளது. ஆனாலும் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது அனைத்து நாடுகளையும் இலக்காக வைத்து தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் நேரில் சென்று பார்த்த புகைப்படங்களை வடகொரியா பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.