திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (09:36 IST)

சீன கம்யூனிஸ்ட்டில் சேர ஜாக்கி சான் விருப்பம்!

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்ப உள்ளதாக தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார். 

 
சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஜூலை 1 ஆம் தேதி தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். இது அவர் அளித்த முழுமையான பேட்டி பின்வருமாறு... 
 
நான் பல நாடுகளுக்கு சென்ற போது சீனா அனைத்து வகையிலும் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. சீன குடிமகனாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். ஐந்து நட்சத்திரங்கள் உடைய சீன சிவப்பு கொடிக்கு உலகம் முழுவதும் மரியாதை கிடைக்கிறது. ஹாங்காங்கும், சீனாவும் என் பிறப்பிடம். ஹாங்காங்கில் விரைவில் அமைதி திரும்பும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.