''டுவிட்டர்'' தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா எலான் மஸ்க்?
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் அதில் இருந்து முக்கிய அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியதும் எலான் மஸ்க் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
சமீபத்தில் அவரது டெஸ்லா பங்குகள் மதிப்பு சரிவடைந்த நிலையில், உலகின் டாப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளார்.
இந்த நிலையில், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து எலான் விலக வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்படி பயனர்களை கேட்டுக் கொண்டார்.
இதற்கு, அவர் பதவியில் இருந்து விலக வேண்டுமென சுமார் 57.5 ( 17.5 மில்லியன் வாக்குகள்) சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
42.5சதவீதம் பேர் அவர் இப்பதவியில் தொடர் வேண்டுமென வாக்களித்துள்ளனர்.
எனவே, விரைவில் டுவிட்டர் சி இ ஓ பதவியில் இருந்து அவர் விலகலாம் என தெரிகிறது.