திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (13:25 IST)

ஹிஜாப் இன்றி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனை வீட்டை அடித்து நொறுக்கிய போலீசார்!

hijaab
ஹிஜாப் இன்றி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனை வீட்டை அடித்து நொறுக்கிய போலீசார்!
ஹிஜாப் இல்லாமல் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீராங்கனையின் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரான் நாட்டில் ஹிஜாப் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இதற்கு எதிராக அந்நாட்டு பெண்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மலையேறும் போட்டியில் ஈரானிய வீராங்கனை ரெகாபி என்பவர் பங்கேற்றார். அவர் ஹிஜாப் அணியாமல் இந்த போட்டியில் பங்கேற்றதை அடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டது
 
மேலும் ஹிஜாப் அணியாமல் போட்டியிட்ட ஈரான் வீராங்கனையின் வீட்டை போலீஸ் அதிகாரிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran