புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (15:55 IST)

ஈரான் அரசுக்கு எதிராக பேச்சு.. ஆஸ்கர் வென்ற படத்தின் நடிகை கைது!

Tharane alithoosti
ஹிஜாப் விவகாரம் தொடர்பான போராட்டட்த்தில் ஈரான் அரசை விமர்சித்த பிரபல நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக ஹிஜாப் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. அதை வெளிநாட்டு சதி என கூறிய ஈரான் அரசு போராட்டக்காரர்களை மூர்க்கமாக அடக்கியது. இந்த போராட்டத்தில் 400க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

மேலும் பல போராட்டக்காரர்களை கைது செய்த ஈரான் அரசு அதில் இருவரை பொதுவெளியில் தூக்கிலிட்டு கொன்றது. இந்த விவகாரத்தில் பலரும் ஈரான் அரசை கண்டித்துள்ளனர். அந்த வகையில் பிரபல ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் ஈரான் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தரானே அலிதூஸ்தியை ஈரான் போலீஸார் கைது செய்துள்ளனர். பிரபல இரானிய இயக்குனர் அஸ்கார் ஃபர்காதி இயக்கி ஆஸ்கர் விருது வென்ற தி சேல்ஸ்மேன் படத்தில் நடித்தவர் தரானே அலிதூஸ்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K