Daily Horoscope
✕

இந்தோனெசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! – 10 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:26 IST)
இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவில் உள்ள புகிதங்கி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகள், கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 10 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ள நிலையில் மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்பதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments