Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைச்சாலையில் திடீர் தீ விபத்து; அலறி ஓடிய கைதிகள்! – 41 பேர் பலியான சோகம்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 8 செப்டம்பர் 2021 (08:56 IST)
இந்தோனேஷியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை அறைகளுக்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பலர் வெளியேற முடியாமல் சிக்கி உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர்.

இந்த கொடூர விபத்தில் சிறை கைதிகள், காவலர்கள் உட்பட 41 பேர் சோகமாக பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லாம் காட்டு

கச்சா எண்ணெய் ஒரு சொட்டு கூட கிடைக்காது!.. அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!...

ஆங்கிலம் கற்க பெங்களூரு வந்த ஜப்பான் இளைஞருக்கு தவறாக சிறை.. ரூ.75,000 நஷ்ட ஈடு...

150 நாளில் ஜென் சி இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த நேபாள பிரதமர்.. இந்தியாவை எதிர்த்ததன் விளைவா?

இன்று ஒரே நாளில் 397 விமானங்கள் தாமதம்.. 26 விமானங்கள் ரத்து.. டெல்லியில் என்ன நடந்தது

கூட்டணி இல்லாம ஜெயிச்சி காட்டுங்க பாக்கலாம்!.. திமுகவுக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!..

அடுத்த கட்டுரையில்
Show comments