1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 23 அக்டோபர் 2024 (07:18 IST)

இன்று சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி.. முக்கிய பேச்சுவார்த்தை?

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று சீன அதிபரை சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சில உடன்பாடுகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
குறிப்பாக எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவும் சீனாவுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிகிறது. இந்திய  பிரதமர் மற்றும் சீன அதிபர் இதுவரை 18 முறை சந்தித்து பேசி உள்ள நிலையில், இன்று நடைபெறும் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள், ராணுவம், எல்லையில் ஏற்பட்டுள்ள உடன்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும், உலக நாடுகள் இந்த சந்திப்பை மிகவும் ஆவலுடன் கவனித்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு அதிகரிக்கும்; இந்தியா-சீனா இடையிலான பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஈரான் உள்ளிட்ட சில நாடுகளின் அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்பது தெரிந்தது.

 
Edited by Siva