ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (17:26 IST)

உச்சம் செல்லும் இந்தியா - கனடா மோதல்! இந்தியாவிற்கு பொருளாதார தடை விதிக்க முடிவு?

pm modi justin trudeau

சீக்கிய அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடா - இந்தியா இடையே எழுந்த வார்த்தை மோதலின் தொடர்ச்சியாக இந்தியா மீது கனடா பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சில மாதங்களுக்கு முன்னராக கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தேகம் தெரிவித்ததால் பரபரப்பு எழுந்தது. இதை இந்தியா மறுத்தது.

 

இந்த விவகாரத்தை கனடா பிரதமர் மீண்டும் கிளப்பியுள்ள நிலையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாக கனடா தெரிவித்தது. இதனால் இந்தியா தனது தூதர்களை கனடாவிலிருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளும் வெளியேற உத்தரவிடப்பட்டனர்.

 

இதனால் இரு நாடுகளிடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க கனடா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்காவும்,கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K