பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு: இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி..!
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெற உள்ளதை அடுத்து, இன்று பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா, ஈரான், சவுதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நிலையில், இன்று 16வது உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெற உள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பலப்படுத்தப்படும். இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார்.
இந்த மாநாட்டை முன்னிட்டு மாஸ்கோவில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், பிரிக்ஸ் கூட்டமைப்பு மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல என்றும், மேற்கு அல்லாத நாடுகளின் கூட்டமைப்பு என்றும் கூறியுள்ளார்.
Edited by Siva