உக்ரைனுக்கு உடனடி இராணுவ உதவி - அமெரிக்க அதிபர் உத்தரவு!
ரஷ்யா - உக்ரைன் மத்தியில் ஏற்பட்டுள்ள போர் உலக நாடுகளுக்கு மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உக்ரைனுக்கு உடனடி இராணுவ உதவியை வழங்கும் ஆணையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் இராணுவ உபகரணங்கள், இராணுவப் பயிற்சி உட்பட உக்ரைனுக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இராணுவ உதவிகளை செய்ய ஜோ பைடன் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.