வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (18:00 IST)

ஓராண்டில் பிரிட்டன் சென்ற இந்தியர்கள் இத்தனை லட்சமா ?

நம் இந்திய நாட்டிலிருந்து கடந்த ஓராண்டு காலமாக, பிரிட்டன் செல்வோரின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளதாக பிரிட்டன் தேசிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 பிரிட்டன் தேசிய புள்ளி விரங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
 
கடந்த வருடம் (2018) ஜுலை தொடங்கி 2019 ஜூன் வரையிலான காலத்தில், இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்க்கு 3 ஆயிரம் பேர் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. 
 
முக்கியமாக  இந்தியாவில் இருந்து, பிரிட்டன் சென்று கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும்.  கடந்த ஓராண்டில் 22000 இந்தியர்கள் கல்வி விசா பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
 
மேலும் பிரிட்டனில் திறன் மிக்க வேலைக்கான விசாக்களை 56, 000 இந்தியர்கள் பெற்றுள்ளனர். இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது 52 % அதிகம் என்று குறிப்பிட்டுள்ளனர். 
 
இதுதொடர்பாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் கூறியுள்ளதாவது : இந்தியர்கள் ப்ரிட்டனுக்கு வருவது அதிகரித்துள்ளது மகிழ்ச்சி. பிரிட்டனின் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க வந்த இந்தியர்கள் எண்ணிக்கை கற்பனை செய்ததைவிட அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.