புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (13:46 IST)

அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறை; செனட் சபை உறுப்பினரான திருநங்கை!

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செனட் உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகளில் தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் பின் தங்கியுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பல இடங்களில் முன்னனி வகித்து வருகிறார்.

இந்நிலையில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக டெல் அவேர் பகுதியில் தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் தேர்தலில் வென்று செனட் சபை உறுப்பினராகியுள்ளார். 31 வயதாகும் சாரா மெக் ப்ரைட் கடந்த ஆண்டுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவான செயல்பாடுகளின் மூலம் கவனம் ஈர்த்தவர். அமெரிக்க அரசியல் வரலாற்றில் திருநங்கை ஒருவர் செனட் சபை உறுப்பினராக பதவியேற்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.