1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (13:27 IST)

கார், பைக்கில் படப்பிடிப்புக்கு சென்ற அஜித்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மத்திய மாநில அரசுகளின் நிபந்தனைப்படி படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் அஜீத் நடித்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு தனது காரில் சென்றார் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அஜித்,  அந்த ஓட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு படப்பிடிப்பு குழுவினர் அனுப்பும் காரை பயன்படுத்தாமல் தன்னுடைய சொந்த பைக்கில்தான் படப்பிடிப்புக்கு சென்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அஜித் பைக்கில் சென்று வருவதை அங்குள்ள ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது