கயானாவில் விமானம் விபத்து : 6 பேர் காயம்
ஃபிளை என்ற விமானம் 128 பயணிகளுடன் ஜார்ஜ் டவுன் விமான நிலையத்தில் தரையிரங்க முற்படும் போது திடீரென சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான நிலையத்தில் ஓடுதளத்தின் பாதையை விட்டு விலகி சென்றபோது அருகே உள்ள ஒரு மணல்மேடான இடத்தின் மீது மோதியதால் விமானம் விபத்துக்குள்ளானது.
இதனால் விமானத்தில் பாகங்கள் சேதம் அடைந்தன. இவ்விபத்தில் 6 பயணிகள் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்ற பயணிகள் அனைவரும் பத்திரமாக எவ்வித காயமுமின்றி தப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.