புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (13:48 IST)

ஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.42 லட்சம் கோடி அபராதம்

இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கூகுள் நிறுவனம்  ஆண்ட்ராய்ட் அமைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக ஐரோப்பிய யூனியன் ரூ.3.42 லட்சம் கோடி அபராதம் விதித்துள்ளது.

 
இணைய உலகில் முதல் இடத்தில் இருக்கும் பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன்மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் விதிகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு 500 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கூகுள் நிறுவனம் இந்த சட்டவிரோதமான செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் தினசரி வருவாயில் 5% ஜரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.