11 வயது சிறுமியை திருமணம் செய்த 40 வயது நபருக்கு என்ன தண்டனை தெரியுமா?
11 வயது சிறுமியை திருமணம் செய்த 40 வயது நபருக்கு வெறும் ரூ.40 ஆயிரம் மட்டுமே அபராதம் விதித்து அந்த சிறுமியுடன் வாழ அனுமதிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்த 40 வயது மலேசிய நபர் ஒருவர் மூன்றாவதாக 11 வயது சிறுமியை திருமணம் செய்தார். இதுகுறித்த வழக்கு ஒன்று அந்நாட்டின் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 11 வயது சிறுமியை திருமணம் செய்த 40 வயது நபருக்கு வெறும் ரூ40 ஆயிரம் மட்டும் அபராதம் விதித்தது. அதுமட்டுமின்றி அபாரதத்தை கட்டிவிட்டு அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தலாம் என்ற அனுமதியையும் வழங்கியுள்ளது.
தற்போது அந்த நபர் இஸ்லாமிய மதக்கவுன்சிலிடமிருந்து திருமணத்திற்கான சான்றிதழை பெற்று சிறுமியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன