படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன்! கத்திக்குத்தில் முடிந்த ப்ரேக் அப்!
அமெரிக்காவில் காதலி ஒருவர் தனது காதலன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லூசியான மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ப்ரையானா லாகோஸ்ட். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் கடந்த 2 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். ஒன்ரறை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் ஒரே படுக்கையில் வாழ்ந்துள்ளனர்.
ஆனால் கடந்த சில காலம் முன்னராக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகமாகவே இருவரும் பிரிவது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக ப்ரேக் அப் பார்ட்டி கொண்டாடிய இருவரும் ஒரு பப்பிற்கு சென்றாக நன்றாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து ஒன்றாக உறங்கியுள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்தபோது காதலன் படுக்கையிலேயே சிறுநீர் கழித்தபடி படுத்துறங்கி கொண்டிருந்துள்ளார். இதனால் கோபமடைந்த ப்ரையானா தனது காதலனை தாக்கியுள்ளார். பதிலுக்கு காதலனும் தாக்க தொடங்க இருவரிடையே மோதல் முற்றிய நிலையில் கத்தியை வைத்து காதலனை குத்தியுள்ளார் ப்ரையானா.
பின்னர் அவரே காதலனை அழைத்து சென்று மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள லூசியானா போலீஸார் ப்ரையானாவை கைது செய்துள்ளனர்.
Edit By Prasanth.K