1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜூன் 2018 (16:04 IST)

ஏவிய இடத்திலேயே வெடித்து சிதறிய ஏவுகணை: வீடியோ இணைப்பு!

ஜெர்மனி போர்க்கப்பல் ஒன்று போர்ப்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது பயிற்சியின் ஒரு பகுதியாக ஏவுகணைக்கள் ஏவப்பட்டன. அப்போது ஏவுகணை ஒன்று தவறுதலாக போர்க்கப்பலில் வெடித்தது. 
 
ஆர்டிக் பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த பயிற்சியின் போது யாரும் எதிபாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தால் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளனர். இது கப்பலின் கேப்டன் பின்வருமாறு பேசினார். 
 
பயங்கரமான நெருப்பு சுவரின் முன்னால் நாங்கள் நின்று கொண்டிருந்தோம், கப்பலின் தானியங்கி தீயணைப்பு அமைப்பு தண்ணீரை அடித்ததால் பணியாளர்களால் தீயை அணைக்க முடிந்தது. கப்பலில் உள்ள ஏவுகணை ஏவும் பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது என கூறினார். 
 
தற்போது இந்த கப்பல் பத்திரமாக துறைமுகம் திரும்பியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...