செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:33 IST)

போயிங் விமானத்த விட அகலமான ஸ்க்ரீன்! – உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் தியேட்டர்!

உலகத்திலேயே மிகப்பெரிய ஐமேக்ஸ் தியேட்டர் ஜெர்மனியில் கட்டப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு பிரம்மாண்டமான படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியானாலும், அவற்றை ஐமேக்ஸில் பார்க்கும் பிரம்மாண்டம் வேறு திரையரங்குகளில் கிடைக்காது என்பது சினிமா ரசிகர்கள் வாதம். அதற்கேற்றவாறு மிகப்பெரும் 70 எம்.எம் திரைகள் பிரம்மாண்டமான திரையரங்கம் என உலகம் முழுவதும் ஐமேக்ஸ் பலரை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் ஜெர்மனியின் லியோன்ஸ்பெர்க் பகுதியில் உலகிலேயே மிக பெரிதான ஐமேக்ஸ் திரையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த திரையரங்கின் ஸ்க்ரீன் 70 அடி உயரமும், 125 அடி அகலமும் கொண்டதாம். ஒப்பீட்டளவில் போயிங் 737 மாடல் விமானத்தின் நீளத்தை விட அதிகமான நீளம் கொண்ட ஸ்க்ரீன் இது. இந்த திரையரங்கில் முதல் படமாக ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.