திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 ஜூலை 2025 (15:25 IST)

வேலைக்கு செல்கிறார் முன்னாள் பிரதமர் .. சம்பளம் முழுவதையும் நன்கொடையாக கொடுக்க திட்டம்..!

rishi sunak
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல இருப்பதாகவும், அவருக்கு வரும் சம்பளம் முழுவதையும் அவர் அறக்கட்டளை ஒன்றுக்கு நன்கொடையாக கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியபோது, அந்நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அவரது கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார். இருப்பினும், அவர் தற்போது எம்.பி. ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனத்தில் அவர் மீண்டும் வேலைக்கு சேர்ந்துள்ளார். முதுநிலை ஆலோசகர் என்ற பணியில் அவர் இணைந்துள்ளதாகவும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில் இருந்து தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் அவர் 'தி ரிச்மண்ட் திட்டம்' என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்த அறக்கட்டளை ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் இணைந்து தொடங்கப்பட்டது என்பதும், இங்கிலாந்து முழுவதும் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக இந்த அறக்கட்டளை உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran