1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (10:23 IST)

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

Nepal Floods

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் அதீத கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மலைப்பகுதிகளில் கனமழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 66 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுதவிர மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களையும் சேர்த்து 112 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

களத்தில் 3 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் 79 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K