1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Raj Kumar
Last Updated : திங்கள், 20 மே 2024 (17:57 IST)

பொண்ணுங்கள பார்த்தாலே ஆகாது! ஓடி ஒளிந்து வாழும் முரட்டு சிங்கிள் முதியவர்!

african man
பெரும்பாலும் வயது வந்த இளைஞர்களுக்கு பெண்களை கவர வேண்டும் என்பதுதான் பெரும் ஆசையாக இருக்கும். உடுத்து உடையில் துவங்கி இதற்காக பல வேலைகளை நம்ம ஊர் இளைஞர்கள் செய்து வருகின்றனர். ஆனால் பெண்களே வேண்டாம் என கூறி பதறி ஓடும் நபரை பார்க்க முடியுமா?அப்படி ஒரு வித்தியாசமான நபர்தான் கலிக்ஸ்டே நஸம்விதா. 71 வயது முதியவரான இவர் ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறார். இவர் பல வருடங்களாக மக்களுடன் பெரிதாக பழகாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்.

இவருக்கு இளம் வயதில் இருந்தே பெண்களை பார்த்தாலே பயம் ஏற்படும் மனநோய் இருந்து வருகிறது. இதனால் எந்த பெண்ணின் அருகிலேயும் இவர் செல்லவே மாட்டார். பெண்களோடு அதிகம் பேசக்கூட மாட்டார். வேறு வழியே இல்லை பேசி ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் மட்டும் அவர்களிடம் பேசுவார்.

சுமார் 55 வருடங்களாக இவர் தனியாகவே வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும்போது கூட ஏதாவது பெண் அதை விற்பனை செய்கிறார் என்றால் அதை அவரிடம் தூக்கி போட சொல்லி எடுத்து கொள்வாராம். அந்த அளவிற்கு பெண்கள் என்றாலே ஆகாது என்று வாழ்ந்து வருகிறார் இந்த விசித்திர மனிதன்.