வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (18:33 IST)

விண்வெளி மையத்திற்கு செல்லும் முதல் சவூதி அரேபிய வீராங்கனை

SODI ARABIRA
சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த  பெண் ஒருவர் முதன் முதலாக விண்வெளிக்குச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

விண்வெளித்துறையில், அமெரிக்காவின் நாசா, சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா  உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளன.

இந்த நிலையில், சவூதி அரேபியா விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக இயங்கி வரும் நீலையில், ஏக்ஸ் 2 என்ற திட்டத்தின் கீழ் அடுத்த கட்டமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு தன் நாட்டைச் சேர்ந்த ரயானா பர்ணாவி என்ற வீராங்கனையை அனுப்பவுள்ளளது.

இவருடன் இணைந்து விண்வெளி வீரர், அலி அர்ல் கர்னி என்பவரும் விண்வெளி செல்லவுள்ளார்.

இவர்கள் இருவரும் பயணம் செய்யும் விண்கலம் அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் அஅண்டு சர்வதேச விண்வெளி மையத்திற்கு சவூதி அரேபியா  ஒரு வீரரை அனுப்பிய நிலையில், தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விண்வெளிக்கி வீராங்கனை செல்லவுள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.