மத்திய ஆப்பிரிக்காவில் பரவும் கொடிய வைரஸ்: ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு!
மத்திய ஆப்பிரிக்காவில் கொடிய வகை வைரஸ் ஒன்று திடீரென பரவி வருவதை அடுத்து ஒரே நாளில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர்களை பலி வாங்கியது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தான் மீண்டும் மனித இனம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் தற்போது மீண்டும் எபோலோ போன்ற கொடிய வைரஸ் ஒன்று மத்திய ஆப்பிரிக்காவில் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த வைரசுக்கு மார்பர்க் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் ஒன்பது பேர் இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து மார்பர்க் என்னும் கொடிய வைரஸை கட்டுப்படுத்த மத்திய ஆப்பிரிக்கா நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva