செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மே 2022 (08:49 IST)

திடீரென உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் மனைவி! – உலக அரசியலில் பரபரப்பு!

Jill Biden
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபரின் மனைவி திடீரென உக்ரைன் புறப்பட்டு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளனர். ஏராளமான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதுடன், தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

ரஷ்யாவின் இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் பொதுமக்களை சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளார். உக்ரைன் போர் குறித்து பேசிய அவர் ”உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரவேண்டும். இந்த போரில் அமெரிக்கா என்றும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாய் நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.