புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 9 அக்டோபர் 2019 (17:23 IST)

4 ஆவது மாடியின் பால்கனியில் சிக்கிய சிறுவன்..அதிர்ச்சி வீடியோ

4 ஆவது மாடியின் பால்கனியிலுள்ள கம்பியில் சிறுவன் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின், ஷாண்டோங்க் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில், 4 ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த வீட்டில் பெற்றோர் சிறுவனை தனியாக விட்டு விட்டு வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் வயதான தாத்தா மட்டுமே இருந்துள்ளார். அப்போது சிறுவன் பால்கனியில் விளையாடிய போது, பால்கனியின் கம்பிகளில் சிக்கிக்கொண்டான்.

சிறுவனின் அழுகுரலை கேட்ட தாத்தா, வெளியே வந்து பார்த்தபோது, சிறுவன் பால்கனி கம்பியில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. உடனடியாக தாத்தா தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவனை மீட்டனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.