ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (18:34 IST)

பிரபல ஓவியரின் ஓவியம் ரூ.755 கோடிக்கு விற்பனை !

அமெரிக்காவில் பிரபல ஓவியரின் உலகப் புகழ்பெற்ற ஓவியம் ரூ.755 கோடிக்கு ஏலம் போயுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் தலைசிறைந்த ஓவியர் பிகாசோ. நவீன ஓவியத்தின் தந்தை எனப் புகழப்படும் இவரது ஒவ்வொரு ஓவியமும் அதிக தொகைக்கு விலைகொடுத்து கலைரசிகர்களால் விரும்பி வாங்கப்படும்.

அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்திலுள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் மறைந்த ஓவியர் பிகாசோவின் பிரசித்தி பெற்ற ஜன்னலின் அருகே ஒரு பெண் அமர்ந்திருப்பது போன்ற ஓவியம் சுமார் ரூ. 758 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

இந்த ஓவியத்தை பிகாசோ கடந்த 1932 ஆம் ஆண்டு தீட்டியதாகத் தெரிகிறது. காலங்கள் போனாலும் கலைக்கு என்றும் உயிர்ப்பான  மதிப்புள்ளது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.