செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (08:30 IST)

இரண்டு டோஸ் போட்டுக்கிட்டா மாஸ்க் அணிய வேண்டாம்! – அமெரிக்கா அறிவிப்பு!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்திக் கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டில் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் மக்களுக்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இதுவரை மக்கள் தொகையில் பாதி சதவீதத்தினருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்ட மக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது டோஸ் எடுத்து இரண்டு வாரங்கள் நிறைவடைந்தபின் மாஸ்க் அணியாமல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளதுடன், மக்கள் அதிகம் கூடும் இடங்களான விமான நிலையம், மருத்துவமனை மற்றும் பொது போக்குவரத்து பகுதிகளில் மாஸ்க் அணிதல் கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளது.

மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத பொது வெளிகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்தவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்கா கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.