புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (20:24 IST)

ஃபேஸ்புக்கில் பழகிய பெண்களை .. உல்லாசம் அனுபவித்து கொன்ற சைக்கோ !

தென்னாப்பிரிக்காவின் நும்பி கிராமத்தில் ஜூலியஸ் தபிசோ என்ற இளைஞரின் வீட்டில் பெண்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் இளம் பெண் ஒருவரைக்  காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் போலீசில்  புகார் செய்தனர். இதுகுறித்து + வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர் . 
 
அப்பெண் கடைசியாக ஜூலியஸ் என்பவரின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. ஜூலியஸ் அந்த பெண்ணின் ஃபேஸ்புக் நண்பர் என்பதால் அவரது அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்றுள்ளார்.
 
ஜூலியஸ் முதலில் அந்த பெண்ணுடன் உல்லாசமாக கொண்டான். அந்த பெண்ணும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
 
பின்னர்  இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளதால்  அந்த பெண்ணை அடித்துக்கொன்று தனது வீட்டைச்சுற்றி இருந்த நிலத்தில் புதைத்து விட்டான். முதலில் போலீஸாரிடம் உண்மையச் சொல்ல மறுத்தவன், அவர்கள் வழியில் அடித்துக் கேட்க தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
 
மேலும் , இதுபோல  இதே போல நான்கு பெண்களை பாலத்காரம் செய்து நிலத்தில்  கொன்று புதைத்திருப்பதாகவும் அவர் போலீசிடம் கூறியுள்ளான். இதைக்கேட்டு போலீசார் அதிர்ந்தனர். 
 
இதனைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்  கிழமை அன்று ஜுலியஸின் வீட்டைச் சுற்றிலும் உள்ள நிலத்தை தோண்டினர். அதில் நான்கு பெண்களின் உடல்களும் தோண்டிஎடுத்துள்ளனர். இனி ஜூலியஸை  நீதிபதி முன்னர் ஆஜர்படுதப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.