ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (14:45 IST)

மியான்மரில் ராணுவ அடக்குமுறை; ராணுவத்தின் பேஸ்புக் கணக்கு நீக்கம்!

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ஆன் சாங் சூகியின் தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய மியான்மர் ராணுவம், ஜனநாயக ஆட்சியை கலைத்து ராணுவ ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.

மியான்மர் ராணுவத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் கடும் ராணுவ பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு எதிராக ஐ.நா சபை உள்ளிட்ட அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் விதிமுறைகளுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் செயல்பட்டதாக மியான்மரின் அதிகாரப்பூர்வ கணக்கை பேஸ்புக் நிரந்தரமாக நீக்கியுள்ளது.