வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:06 IST)

மக்கள் பயப்படுறாங்க.. முதல் ஊசிய எனக்கு போடுங்க! – முன்வந்த ஆஸ்திரேலிய பிரதமர்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு பிரதமரே முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்குவதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற பதட்டம் காரணமாக மக்கள் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னோட்டமாகவும், மக்களிடையே உள்ள பீதியை குறைக்கும் விதமாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.