செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (09:37 IST)

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக்குக்கு திடீர் பின்னடைவு

rishi sunak
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக் அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தற்போது இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர் 
 
இந்த இருவரில் ஒருவர் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுகுறித்து கருத்து கணிப்பு நேற்று வெளியானது. இந்த கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ்க்கு அதிக ஆதரவு உள்ளது என்பது தெரியவந்து உள்ளது 
 
இருப்பினும் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெறும் 2 லட்சம் உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது